சென்னை: சென்னையில் அக்டோபர் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தியவர்கள், கட்டவில்லை என்று எஸ்எம்எஸ் வந்தாலும் மீண்டும் கட்ட வேண்டாமென போலீசார் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ஆன்லைனில் அபராத தொகை வசூக்கப்படுகிறது. ஹெல்மெட் போடாமல் சென்றால், அதிவேகத்தில் சென்றால், ஆவணங்கள் இல்லாமல் சென்றால், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டினால் என பல்வேறு தவறுகளுக்கு தமிழக போக்குவரத்து போலீசார் வாகனத்தை புகைப்படம் எடுத்து ஆன்லைனில் வண்டியின் ஓனருக்கு எஸ்எம்எஸ் மூலம் அபராத தொகை அனுப்புகிறது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு கடந்த மாதம் 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டே நாட்களில் அவர் அபராதத்தை செலுத்திய நிலையில், 3000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்தது. இதே போல், அக்டோபர் 1ம் தேதிக்கு முன் அபராதத்தை செலுத்தி சிலருக்கும், அபராதத் தொகையை செலுத்தக்கோரி குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இது தொடர்பாக விளக்கமளித்த போக்குவரத்து போலீசார், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது போன்ற எஸ்எம்எஸ்கள் வருகிறது, ஏற்கனவே அபராதம் கட்டியவர்கள் மீண்டும் கட்ட வேண்டாம் என்றார்கள்.
– பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/fines-for-violating-traffic-rules-in-chennai-important-announcement-by-police-401229.html