கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்தது தமிழகம். அதே தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இருந்து வருகிறது சென்னை. இந்நிலையில், ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பிறகு சென்னை நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக 5000 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3000 ஆகக் குறைந்துள்ளது சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. தலைநகரில் பாதிப்பு விகிதம் இப்படி கணிசமாகக் குறைந்துள்ளது நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
78,896 பேருக்கு செய்யப்பட்ட சோதனைகளின் முடிவில், 2886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, நேற்றைய தினம் ஒரு மரணம் கூட சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/no-deaths-in-chennai-and-new-registered-coronavirus-cases-less-than-3000/articleshow/78854527.cms