சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டு இருந்த கண்டெய்ணர் லாரி செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டு வந்த இரும்பு பாரத்தை உடைத்து கொண்டு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார்.
நேற்று விடுமுறை என்பதால் அந்த இடத்தில் தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: https://www.sathiyam.tv/chennai-central/