இந்த விபத்தில் ரீனாவின் காலிலும் காயம் ஏற்பட்டது. அதனால் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் அய்யப்பன்(35) என்பவரைக் கைது செய்தனர். இவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர்.
விபத்தில் உயிரிழந்த பவுல்சம்பத்ராஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் பவுல்சம்பத்ராஜ், பைக்கில் வேகமாகச் சென்றபோது ஸ்பீடு பீரேக்கை அவர் கவனிக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது பின்னால் வேகமாக வந்த லாரியில் பவுல்சம்பத்ராஜ் மற்றும் ரீனா ஆகியோர் சிக்கியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக ரீனா உயிர்பிழைத்துக் கொண்டார்.
பிறந்தநாள் விழாவுக்கு சந்தோஷமாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: https://www.vikatan.com/news/accident/chennai-private-company-employee-died-in-accident