தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா சூழலை கருத்தில்கொண்டு மத சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாதென்று தமிழக அரசு உத்தரவிட்டது.
தொடர்ச்சியாக பாஜகவினர் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கும் தடை விதித்தது. ஆனால். தடையை மீறி யாத்திரை செல்வோம் என தெரிவித்த மாநில பாஜக தலைவர் எல். முருகன் கடந்த 6 ஆம் தேதி திருத்தனியில் வேல் யாத்திரையை தடையை மீறி நடத்த முயன்றார். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளு முள்ளு இரட்டை நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று எல்.முருகன் தலைமையில் வாகனங்கள் மூலம் பாஜகவினர் வேல் யாத்திரை சென்றனர். இதனால், பூந்தமல்லி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் வழி கிடைக்காமல் அரை மணி நேரம் வரை நெரிசலில் சிக்கி பரிதவித்தது. அந்த நிகழ்வினை வீடியோ எடுத்த சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
செங்கோட்டையன்: பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வர் 11ஆம் தேதி பேசுவார்…
அரசு மற்றும் காவல் துறையின் எதிர்ப்பை மீறியும் பாஜகவினர் வேல் யாத்திரை செய்ய தொடர்ச்சியாக முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குளாகியுள்ளது. இதற்கிடையில் 2 வது நாளாக தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயற்சித்த எல்.முருகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வேல் யாத்திரையை தொடரவிருந்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில பாஜக தலைவர் எல்.முருகன், ” ஊர்வலங்களை நடத்துவதற்கும், போராட்டங்களை நடத்துவதற்கும் மாநில அரசு மற்ற கட்சிகளை அனுமதிக்கிறது. இது எனது அரசியலமைப்பு உரிமை. ” என இவ்வாறு தெரிவித்தார்.
Source: https://tamil.samayam.com/latest-news/state-news/today-an-ambulance-was-stuck-in-a-traffic-jam-due-to-the-bjp-vel-yatra-in-chennai/articleshow/79113508.cms