‘சென்னை- திருப்பதிக்கு நவ.19- ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்’ – தெற்கு ரயில்வே அறிவிப்பு! – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

chennai to tirupati special train southern railway announced

 

சென்னையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும், ‘சப்தகிரி சிறப்பு ரயில்’ வரும் நவம்பர் 19- ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, நாளை (17/11/2020) காலை 08.00 மணிக்குத் தொடங்க இருக்கிறது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் ரயிலில் பயணிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-tirupati-special-train-southern-railway-announced