சென்னை: சென்னையில் நவம்பர் 21, 22, டிச 12, 13ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 902 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெயர்/சேர்த்தல, நீக்குதல் மற்றும் திருத்தங்கள் உள்ளிட்டவை மாற்றிக் கொள்ளலாம் என்றும், மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் திருத்தும் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=632756