நவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் அருகே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நவம்பர் 25-ஆம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 23ஆம் தேதி உருவாகும் என அறிவித்த நிலையில் அது நேற்றே உருவானது. இதன் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் நவம்பர் 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

imageசென்னைக்கு மிக அருகே.. இன்னும் 3 நாளில்.. ஒரு பக்கம் ரெட் அலர்ட், இன்னொரு பக்கம் புயல்..கவனம் மக்களே

நவம்பர் 25

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது சென்னை- காரைக்கால் நிலை கொண்டிருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது.

கனமழை

இதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். இதையடுத்து வரும் நவம்பர் 25-ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும்.

தீவிர புயல்

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும். இந்த புயல் தீவிர புயலாக மாறுமா அல்லது வெறும் புயலாகவே கரையை கடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எனவே மீணவர்கள் இன்று முதலே கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்

முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டதால் கனமழை பெய்யும் என தெரிகிறது. அது போல் தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எந்தவித புயலும் ஏற்படாத நிலையில் இந்த ஆண்டு புயல் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/cyclone-will-cross-the-land-near-mamallapuram-403780.html