சென்னை: தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக அதிக மழை பெய்த ஊர்களின் விவரங்களையும், பெய்த மழையின்அளவு விவரங்களையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் அதிக மழை பெற்ற பகுதிகள் என்றால் அது சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், விழுப்புரம் பகுதிகள் தான். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மேற்கண்ட பகுதிகளில் 25 முதல் 30 செமீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் அதிகபட்ச மழை என்றால் அது தாம்பரத்தில் தான். நான்கு மாவட்டங்களை உள்ளடங்கிய சென்னை மற்றும் சென்னையின்புறநகர் பகுதிகளில் தான் கடந்த 3 நாட்களில் மிக கனமழை பெய்துள்ளது. மற்ற ஊர்களில் மழை என்பது நேற்று ஒரு நாளில் தான் அதிகமாக இருந்தது.
நகர மறுக்கிறது.. எங்க போய் நிக்குது பாருங்க நிவர்.. திருவண்ணாமலையில் விடாமல் சுழன்று அடிக்கும் புயல்
அதிகபட்ச மழை
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த அதிகபட்ச மழை விவரத்தை இப்போது பார்ப்போம்:
- தாம்பரம் 31 செமீ
- புதுச்சேரி 30 செமீ
- விழுப்புரம் 28 செமீ
- கடலூர் 27 செமீ
- சென்னை (மெரினா கடற்கரை பகுதிகள்
- அடங்கிய டிஜிபி அலுவலகம்) 26 செமீ
- சோழிங்கநல்லூர் (சென்னை) 22 செமீ
விழுப்புரம் பகுதிகள்
- தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 19 செமீ
- பரங்கிப்பேட்டை 18 செமீ
- சோழவரம் 17 செமீ
- செஞ்சி (விழுப்பரம்), பூந்தமல்லி(திருவள்ளூர்). அம்பத்தூர்(திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருவள்ளூர், கும்முடிப்பூண்டி (திருவள்ளூர்) ஆகிய ஊர்களில் 15 செமீ மழை
செம்பரம்பாக்கத்தில் எவ்வளவு
திண்டிவனம்(விழுப்புரம்) மதுராந்தகம் (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), வானூர்(விழுப்புரம்), கொள்ளிடம் (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்) ஆகிய ஊர்களில் 14 செமீ மழை பெய்துள்ளது
மரக்காணம் எவ்வளவு
எம்.ஜி.ஆர் நகர் ( சென்னை), காஞ்சிபுரம் ( காஞ்சிபுரம்), குறிஞ்சிபாடி(கடலூர்), ஆலந்தூர் (சென்னை), சிதம்பரம் (கடலூர்), ரெட் ஹில்ஸ் (டிஸ்ட் திருவள்ளூர்), மரக்காணம் ( விழுப்புரம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), திருப்பானி (‘திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்) ஆகிய ஊர்களில் 13 செமீ மழை பெய்துள்ளது.
பூண்டி நிலவரம்
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி, பூண்டி ( திருவள்ளூர்), வடபுதுபட்டு (திருப்பத்தூர்), கீழ்பெண்ணாதூர் (திருவண்ணாமலை), கொரட்டூர் ( திருவள்ளூர்),
சீர்காழி (நாகப்பட்டினம்) ஆகிய ஊர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் 10 செமீக்கு மேல் பெய்துள்ளது. அதேநேரம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் மழை அளவு குறைவுதான்.
– பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/how-much-rain-in-the-last-24-hours-in-tamil-nadu-chennai-imd-report-404232.html