சென்னை: சென்னையை சேர்ந்த 8 வயது சிறுவன் சாய் சரண் குமார், 1985ம் ஆண்டு முதல் 2019 வரையிலான 65 தனித்துவமான 5 ரூபாய் நாணயங்களை சேகரித்து உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் எக்ஸ்ளூசிவ் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதேபோல் 10 வயதாகும் கவின் குமார் என்ற மாணவரும் வெளிநாடு மற்றும் உள்நாடுகளின் அபூர்வமான நாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சங்கரபாணி பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சாய்சரண்குமார். தனது ஆறுவயதில் பொழுதுபோக்காக நாணயங்களை சேகரிக்க தொடங்கினார்.
அவர் தனது தாத்தா பாட்டிகளிடமிருந்து பெற்ற முதல் நாணயம் இந்திரா காந்தி 1985ம் ஆண்டு வெளியான 5 ரூபாய் நாணயம் தான். அதன்பிறகு பல்வேறு நாணயங்களை சேகரிக்க தொடங்கிய சாய்சரண்குமார், குறிப்பிட்ட சில நிகழ்வை நினைவுகூருவதற்காக வழங்கப்பட்ட நினைவு நாணயங்களையும் சேகரித்தார்.
1985-2019 வரையிலான 5 ரூபாய் நினைவு நாணயங்களை சேகரித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிமுகம் செய்த 5 ரூபாய் நாணயம் தொடங்கி, சமீபத்திய 5 ரூபாய் வரை சேகரித்துள்ளார். எம்ஜிஆரை நினைவு கூரும் நினைவு நாணயத்தையும் சேகரித்துள்ளார்.
அத்துடன் 1991 சுற்றுலா ஆண்டுக்கான நாணயம் , எஸ்பிஐ மற்றும் ஓஎன்ஜிசியை நினைவு கூறும்.காப்பர் நிக்கல் நாணயங்களையும் சேகரித்துள்ளார். .நினைவு நாணயம், பழைய நாணயங்கள், பழஙகால நாணயங்கள், செல்லாதவை உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக அறிந்து வைத்திருக்கிறார்.
8 வயதிலேயே அவர் இந்திய நாணய புத்தகம் (ஆசிரியர் – சாய்நாத் ரெட்டப்பா) மற்றும் இந்தியாவின் நாணயங்கள் (ஆசிரியர் -திலிப் ராஜ்கோர்) ஆகியவற்றை முடித்திருக்கிறார்,. நினைவு நாணயங்களைத் தவிர, அவரது சேகரிப்பில் கி.மு. 4 முதல் கழுதை, செல்லாதவை மற்றும் வெள்ளி பஞ்ச் மார்க் நாணயம் ஆகியவற்றையும் சேகரித்துள்ளார்.
இதேபோல் 10 வயதாகும் கவின் குமார் என்ற மாணவரும் வெளிநாடு மற்றும் உள்நாடுகளின் அபூர்வமான நாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து எக்ஸ்ளூசிவ் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரும் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சங்கரபாணி பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொழுதுபோக்காக 8 வயதில் நாணய சேகரிப்பைத் தொடங்கிய கவின், 980 களில் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட பல்வேறு இந்திய நாணயங்களையும் சேகரித்துள்ளார். பல்வேறு வெளிநாடுகளின் அபூர்வ நாணயங்களையும் சேகரித்துள்ளார். 10 பைசாவிலிருந்து 5 ரூபாய் வரை பல்வேறு இந்திய நாணயங்களை சேகரித்துள்ளார். மேலும் இந்தியாவின் 36 வகையான 2 ரூபாய் நோட்டுகளையும் சேகரித்துள்ளார்.
– பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/two-chennai-boys-exclusive-world-records-for-coin-collection-404573.html