சென்னை: சென்னையில் 15 வயது பெண்ணை, 400 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் விஸ்வரூபமெடுக்கிறது.. இந்த வழக்கில், ஓய்வுபெற்ற டிஎஸ்பி உள்ளிட்ட பல போலீஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், டாக்டர்கள் என பலரையும் போலீசார் கைது செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது!
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அந்த சிறுமி… இவரது அக்கா, அதாவது பெரியம்மா மகள் பெயர் ஷாகிதா பான கர்ப்பமாக இருந்தார்.
அதனால், அவருக்கு உதவியாக அந்த வீட்டிற்கு சென்றார் சிறுமி.. ஆனால், ஷாகிதா பானுவும் அவரது கணவர் மதன்குமார், மதன்குமாரின் சகோதரி சந்தியா ஆகிய 3 பேரும் பணத்துக்காக ஆசைப்பட்டு, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.
புகார்
இதுதொடர்பாக சிறுமியின் அம்மா, போலீசில் புகார் தரவும், ஷாகிதா பானு உள்ளிட்ட 8 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோதுதான், பல அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன.
பாஜக பிரமுகர்
எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் என லிஸ்ட் வெளியே வந்தது.. இவர்களையும் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்… சிறுமியை தினமும் பாலியல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள்.. முக்கியமாக அரசியல் பிரமுகர்களுக்குதான் சிறுமி அதிக முறை விலைபேசப்பட்டிருக்கிறாள்.
ரிசார்ட்
இதற்காக, அந்த பிஞ்சு குழந்தையை, ஈசிஆர் ரோட்டில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அந்த கும்பல்.. அந்த ரிசார்ட்டில் பல பேர் வந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். ஷகிதா பானு, மதன் குமார், சந்தியா, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோரின் செல்போனை ஆய்வு செய்தபோதுதான், இவர்கள் பல பேரிடம் சிறுமியை வைத்து பேரம் பேசியதும், பணத்தை கறந்ததும் தெரியவந்தது.
லிஸ்ட்
இந்நிலையில், இது சம்பந்தமாக மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.. சிறுமியை யார் யார் பலாத்காரம் செய்தனர் என்ற போலீசாரின் லிஸ்ட்டில் டிஎஸ்பி அந்தஸ்தில் இருக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும் அடக்கமாம்.. இவரை தவிர, இப்போது பணியில் உள்ள 2 காவல் ஆய்வாளர்கள், 2 மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் என பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பெண்ணை நாசம் செய்ததில், ஒரு டிவி ரிப்போர்ட்டரும் அடக்கமாம்.. பெயர் வினோபாஜி.. வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த வினோபாஜி, சிறுமியை சீரழித்துள்ளார்.. இப்போது இவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்..
நடவடிக்கை
இதையெல்லாம் பார்த்து, கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் அதிர்ந்து போய்விட்டார்.. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீத உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்று மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.. எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தோர் லிஸ்ட்டை 4 காவல் ஆய்வாளர்கள் விசாரித்து வருவதாகவும், விரைவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல முக்கிய பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தண்டனை
பொள்ளாச்சி சம்பவத்தைவிட மிக மிக கொடூரமான சம்பவமாக இது உள்ளது.. அயனாவரம் சிறுமியையும் இப்படித்தான் ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, தண்டனையை வாங்கி கொண்டு ஜெயிலுக்குள்ளே இருக்கிறது.. இது தெரிந்தும் வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது அதிர்ச்சியை தந்து வருகிறது.
அயனாவரம் சிறுமி
அயனாவரம் சம்பவத்தில், வாட்ச்மேன், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போட வந்தவர் என அந்த அப்பார்ட்மென்ட்டுக்கு சம்பந்தப்பட்டவர்களே அதிகம் சிக்கினர்.. ஆனால், இது அதைவிட பயங்கரமாக இருக்கிறது.. சிக்கி உள்ளவர்களும், சிக்க போகிறவர்களும் உயரதிகாரிகள்.. அரசு ஊழியர்கள.. கண்ணியம் மிக்க பொறுப்பில் உள்ளவர்கள்.. இவர்கள்தான் தங்களை காப்பாற்றுவார்கள் என்று அப்பாவி மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. மொத்தம் 400 பேர் என்கிறார்கள்.. இந்த 400 பேரில் ஒருவருக்கு கூடவா ஈவிரக்கம் இல்லை? உயர் பொறுப்பில் உள்ளவர்களே இந்த அக்கிரமத்தில் சிக்கி உள்ளதும், அடுத்தடுத்து நடக்கும் கைது சம்பவங்களையும் கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர்!
– பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-washermenpet-15-year-old-girl-sexual-harassment-issue-404611.html