சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்றாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தம்பதி – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழனன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றுக்கொள்ளும் விழா நடந்தது. இதில் ஒரு சுவார்சியமான விஷயமும் காணக்கிடைத்தது.

கணவன் மனைவியான நீதிபதி முரளி சங்கர் குப்புராஜு மற்றும் நீதிபதி தமிழ்ச்செல்வி டி வலயபாளையம் ஆகிய நீதிபதிகள் வியாழக்கிழமை மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் கணவன்-மனைவி தம்பதியினர் ஒரே நாளில் ஒன்றாக நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்னர், நீதிபதி விவேக் பூரி மற்றும் நீதிபதி அர்ச்சனா பூரி ஆகியோர் கடந்த ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் ஒரே நாளில் நீதிபதிகளாக பதவியேற்றனர்.

வியாழக்கிழமை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) 10 பேர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

மற்றொரு சாதனையாக, நேற்று நான்கு பெண் நீதிபதிகள் பொறுப்பேற்ற நிலையில், நாட்டிலேயே மிக அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றமானது (High Court) மெட்ராஸ் உயர்நீதிமன்றம். இங்கு இப்போது 13 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

தம்பதியாக பதவியேற்ற முரளி சங்கர் குப்புராஜு மற்றும் டி தமிழ்ச்செல்வியைத் தவிர, ஜி சந்திரசேகரன், ஏ ஏ நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சதிகுமார் சுகுமாரா குருப், மஞ்சுளா ராமராஜு ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

10 நீதிபதிகளும் தமிழகத்தின் (Tamil Nadu) துணை நீதித்துறையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்.

ALSO READ: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்குக!

இந்த நியமனங்களின் மூலம், நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 53-லிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகளுக்கு (Judges) அனுபதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 75 ஆகும்.

பார் சார்பாக புதிதாக பதவியேற்ற நீதிபதிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதைக் குறிப்பிட்டு, வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயணன், இந்த நியமனங்களின் மூலம் உயர் நீதிமன்றத்தில் இருந்த காலியிடங்கள் 12 ஆகக் குறைந்துள்ளது என்றார்.

மீதமுள்ள காலியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு நாளாவது உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு அனைத்து நீதிபதிகளையும் கௌரவமிக்க உயர் நீதிமன்றத்தில் காணும் நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களில், நீதிபதி முரளி சங்கர் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் மற்றவர்களைக் காட்டிலும் இளையவர்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால் அவர்கள் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவார்கள்.

ALSO READ: ரஜினிகாந்த் உடன் பாஜக இணையுமா? AIADMK-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/couple-take-oath-as-judges-of-madras-high-court-along-with-8-other-judges-351049