ஆனால் அந்த இளைஞர், மீண்டும் மீண்டும் ரதியின் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், அநாகரிகமாக நடந்திருக்கிறார். அந்த இளைஞர் மதுபோதையில் இருப்பதைத் தெரிந்துகொண்ட ரதி, உடனடியாக செல்போனில் தனக்குத் தெரிந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தனர். அப்போதும் இளைஞர், ரதியிடம் தகராறு செய்திருக்கிறார். ரதிக்கு ஆதரவாக வந்த பெண்கள், பொதுமக்கள் போதையிலிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் காவல் சீருடையில் இருந்தது தெரியவந்தது. மேலும், போதையில் இருந்த காவலரும் தகராறில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த பெண்கள், தங்களின் காலனியைக் கழற்றி காவலரைத் தாக்கத் தொடங்கினார். பொதுமக்களின் பிடியில் சிக்கிக்கொண்ட காவலரால் எதுவும் செய்ய முடியவில்லை. காவலரைப் பெண்கள் தாக்கும் காட்சியை சிலர், தங்களின் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். பின்னர், வடபழனி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அங்கு வந்து காவலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் காவலரின் பெயர் ராஜூ எனத் தெரியவந்தது. இவர், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றுவதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
காவலரைப் பெண்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-public-beating-police-in-vadapalani-video-gone-viral