சென்னை: ஆண் நண்பருடன் ஊர் சுற்றிய இளம் பெண், வீட்டில் தெரிந்தால் திட்டுவார்கள் எனறு பயந்ததுடன், தன்னை மர்ம நபர்கள் கடத்தியாக நாடகம் ஆடியது சென்னை போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தன்னை சிலர் கடத்தியதாக தகவல் கொடுத்தார்.
அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில், தன்னை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாகவும். கடத்தல்காரர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்கள் என்றும் பின்பு தன்னை தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் கூறினார்.
விசாரணை
இதையடுத்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவை பத்திரமாக மீட்டனர். அந்த பெண்ணை பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் நேற்று ரம்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசுக்கு சந்தேகம்
அப்போது ரம்யா முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். ரம்யா நள்ளிரவு ஒரு மணி வரை அவரது ஆண் நண்பருடன் செல்போனில் சாட் செய்தது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு கடத்தல் நாடகமாக இருக்குமோ என்று அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை செய்தனர்.
கடத்தல் நாடகம்
அப்போது ரம்யா கடத்தல் நாடகத்தை ஒப்புக்கொண்டார். என்னுடைய ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்தேன். வெகுநேரம் ஆகிவிட்டது. இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்று பயந்தேன். இதனால் என்னை லர் கடத்திச் சென்றதாக நாடகமாடினேன் என்று வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து ரம்யாவை போலீசார் கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
பொய் சொல்வது
சில பெண்கள் நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிவதும், பின்னர் பெற்றோருக்கு தெரிந்தால் சிக்கல் ஏற்படும் என்று பயந்து ஏதோவது ஒரு பொய் சொல்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஆனால் இந்த பெண் கொஞ்சம் எல்லை மீறி போலீசுக்கு போன் செய்து தன்னை கடத்திவிட்டதாக கூறியதால் மாட்டிக்கொண்டார். பெற்றோருக்கு தெரியாமல் செய்யும் தவறுகள் பிரச்சனையைத்தான் உருவாக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதே பிரச்சனைகளில் பெண்களை பாதுகாக்கும்.
– பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-girl-lied-to-parents-as-a-kidnapper-of-mysterious-persons-who-travel-with-boy-friend-405329.html