சென்னையில் இருந்து இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்.. ரயில்வே வாரியம் ஒப்புதல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை சென்ட்ரல்-சத்யசாய் பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி), சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, கொச்சுவேலி-மைசூா் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை- புட்டபர்த்தி (ரயில் நிலையத்தின் பெயர் சத்யசாய் பிரசாந்தி நிலையம்): சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06073) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தை சென்றடையும்

மறுமார்க்கமாக சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து டிசம்பா் 12, 19, 26 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 6.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06074) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை-விஜயவாடா: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாள்களில்) காலை 7.25 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (02077) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும்.

மறுமார்க்கமாக விஜயவாடாவில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகளில் தவிர மற்ற நாள்களில்) பிற்பகல் 3.20 மணிக்கு சிறப்பு ரயில்(02078) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்துசேரும்.

கொச்சுவேலி-மைசூா்: கொச்சுவேலியில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை(21 சேவைகள்) மாலை 4.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06316) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு மைசூரை அடையும்.

மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து டிசம்பா் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை(21 சேவைகள்) நண்பகல் 12.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06315) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/special-trains-on-two-routes-from-chennai-approved-by-railway-board-405533.html