சென்னை கல்லூரிகள், விடுதிகளில் 210 பேருக்கு கரோனா! | chennai colleges and hostels coronavirus positive case raise – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 210 பேருக்கு கரோனா உறுதியானதாக சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது. 

 

‘டிசம்பர் 16- ஆம் தேதி வரை சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 6,344 கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 210 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது; 3,773 பேருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இன்னும் 2,361 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.’ என சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது. 

 

6,344 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அதிகபட்சமாக 13- வது மண்டலத்தில் மட்டும் 200 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் கூறுகின்றனர். 

 

 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-colleges-and-hostels-coronavirus-positive-case-raise