சென்னையை அடுத்த குன்றத்தூர், கிழக்குக் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் பழனி. கார் டிரைவர். இவரின் மனைவி தேவி. இந்தத் தம்பதியினரின் மகள் தீபிகா (12). குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தார் புத்தாண்டு தினத்தன்று அசைவ பிரியாணி சமைக்கும்படி தீபிகா, தேவியிடம் கூறியிருக்கிறார். அதற்கு இந்த ஆண்டு புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் வருவதால் அசைவ பிரியாணி சமைக்க முடியாது என்று தேவி தெரிவித்திருக்கிறார். அதனால், மாணவி தீபிகாவுக்கும் தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தத்தில் தீபிகா இருந்திருக்கிறார். பின்னர் அறைக்குச் சென்ற தீபிகா, நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அதனால் சந்கேமடைந்த குடும்பத்தினர் தீபிகாவின் அறைக் கதவை தட்டியிருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-school-student-commits-suicide-2