சென்னை: `18 வயதானதும் திருமணம் செய்துகொள்கிறேன்!’ – மாணவியை ஏமாற்றிய காதலன் போக்சோவில் கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

திருவல்லிக்கேணி காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்துவருபவர் பூஜா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பூஜாவுக்கும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நந்தாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது, நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதல் ஜோடி நெருங்கிப் பழகியிருக்கிறது.

தற்போது காதல் ஜோடிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி பூஜா, நந்தாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து பூஜா, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நந்தா மீது புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், நந்தாவிடம் விசாரணை நடத்தி கைதுசெய்தனர். நந்தாவிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-lover-in-pocso-act