சென்னை: சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காலத்தில், 1.10.2021 முதல் 20.11.2021 வரை தமிழ்நாட்டில் 518.99 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 68 சதவிகிதம் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில சராசரி 6.59 மில்லி மீட்டர். திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 39.91 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
வடக்கு தமிழ்நாட்டில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு தமிழ்நாடு, ராயல்சீமா பகுதியில் நிலவுகிறது என்றும், இது மேற்கு வடமேற்காக நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். 21.11.2021 – அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கொட்டித்தீர்த்த கனமழையால் அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான, மேட்டூர் அணையிலிருந்து 65,000 கன அடியும், பூண்டியிலிருந்து 29,684 கன அடியும், செங்குன்றத்திலிருந்து 660 கன அடியும், சோழவரம் ஏரியிலிருந்து 400 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 361 கன அடியும் திறந்து விடப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும், வேலூர் மாவட்டத்தில் 2 குழுக்களும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையேவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான, மேட்டூர் அணையிலிருந்து 65,000 கன அடியும், பூண்டியிலிருந்து 29,684 கன அடியும், செங்குன்றத்திலிருந்து 660 கன அடியும், சோழவரம் ஏரியிலிருந்து 400 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 361 கன அடியும் திறந்து விடப்படுவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும், வேலூர் மாவட்டத்தில் 2 குழுக்களும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/moderate-chance-for-next-2-hours-in-13-districts-including-chennai-439736.html