சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைகள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சியில் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் 89 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் – திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படப்பட்டுள்ளது.

மொத்தம் 89 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் – 89

பணி வாரியாக:

மருத்துவ அலுவலர் – 2 காலியிடங்கள்

தகுதி – எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள். மேலும், தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணியில் பெயர்: மருத்துவ அலுவலர் – 3 காலியடங்கள்

தகுதி – எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள். மேலும், தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் – 01

தகுதி – எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள். மேலும், தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் -2

சுகாதார நிர்வாகவியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிஏ படித்திருக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – 4

தகுதி : அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். அல்லது உளவியல், தொடர்பு துறையில் அனுபவம் தேவை.

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் – 03

தகுதி – அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் – 02

தகுதி – அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மருந்தாளுனர் – 3

தகுதி – பி.பார்ம், டி பார்ம் படித்திருக்க வேண்டும்

ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர் – 58

தகுதி – அறிவியல் பாடம் எடுத்து ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இவை தவிர TB சுகாதாரப் பார்வையாளர் (5 காலியிடங்கள்), கணினி இயக்குபவர் (1 காலியிடம்) உள்ளிட்ட பதவிகளை நிரப்புவது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை – நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க www.chennaicorporation.gov.in தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : திட்ட அலுவலர் – திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு, நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை -600012

கடைசி தேதி – நவம்பர் 29, 2021

கூடுதல் தகவல்களுக்கு

www.chennaicorporation.gov.in

வேலை செய்ய விடவில்லை.. பட்டென கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராடிய ஜோதிமணி.. என்ன நடந்தது?

English summary
New job news in greater chennai corporation. latest recruitment notifications in chennai corporation.

Source: https://tamil.oneindia.com/jobs/jobs-recruitment-announcement-in-health-department-of-greater-chennai-corporation-440341.html