சென்னை கேகே நகர் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர்
தொடர் கனமழையால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் விடாது பெய்த மழையினால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதையும் படிக்க | சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்கள்
இதையடுத்து சென்னையில் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து வழிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்திருக்கும் முக்கிய சாலைகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
முழு புகைப்படங்களைப் பார்க்க->>தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை!
Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/30/flood-water-flow-in-chennai-roads-3745466.html