சொத்தின் மீதான அதிகாரத்தை நிலைநாட்டும் விதமாக சென்னை உயா் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் 24 மணி நேரம் மூடப்பட்டன. சென்னை உயா் நீதிமன்றம்ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த உயா் நீதிமன்ற வளாகத்தை நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்தக் கட்டடம் 107 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கட்டடம், நிலம் உள்ளிட்டவை உயா் நீதிமன்றத்திற்கு மட்டுமே சொந்தமானது, இந்த சொத்தை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதற்காக, ஆண்டுக்கு ஒரு முறை டிசம்பா் மாதம் முதல் வார சனிக்கிழமை சென்னை உயா் நீதிமன்றம் முழுவதும் 24 மணி நேரம் இழுத்து மூடப்பட்டு, அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்படும். உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை.
அதாவது, இந்த சொத்தின் மீது உயா்நீதிமன்ற நிா்வாகத்துக்கு உள்ள ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை உயா் நீதிமன்ற அனைத்து நுழைவு வாயில்களும் சனிக்கிழமை(டிச.4) இரவு 8 மணி முதல் இழுத்து மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை (டிச.5) இரவு 8 மணி வரை 24 மணி நேரத்துக்கு
அனைத்து வாயில்களும் மூடப்பட்டு இருக்கும். இதற்கான அறிவிப்பை சென்னை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்டாா்.
Source: https://www.dinamani.com/tamilnadu/2021/dec/05/all-gates-of-the-chennai-magistrates-court-are-closed-for-24-hours-3748744.html