சென்னை: சென்னையில் 65 சதவீதம் பேர் முகக் கவசம் அணிவதில்லை என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸால் 20 க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை பிப்ரவரி மாதம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
2019ஆம் ஆண்டு இறுதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வெளிநாடுகளில் 3ஆவது அலை, 4 ஆவது அலை வரை சென்றுவிட்டது. இந்தியாவில் 2 அலைகள் இது வரை ஏற்பட்டுள்ளன.
அசாமில் மீட்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கடிகாரம்.. ஒருவர் கைது.. என்ன நடந்தது? பரபர தகவல்
32 முறை உருமாற்றம்
இதில் முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமிக்கதாக இருந்தது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3ஆவது அலை பற்றிய அச்சம் மக்களிடையே இருந்தது. இந்த நிலையில் ஓமிக்ரான் 32 முறை உருமாற்றமடைந்ததால் அதன் மீதான பீதியும் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.
முகக் கவசம்
இதனால் 3-ஆவது அலையையும் வெல்வதற்கு முகக் கவசமும் தடுப்பூசியும்தான் சிறந்த வழி என மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஆஸ்திரியா
அப்போது ரஷ்யா, ஆஸ்திரியா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா50 வகையாக உருமாறி வருகிறது. 1.08 கோடி பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசியையும் 94 லட்சம் பேர் 2-ஆவது தவணை தடுப்பூசியையும் செலுத்தவில்லை. பொது இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
600 பேருக்கு கொரோனா தொற்று
தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். தமிழகத்தில் தினசரி 600 பேருக்கு கொரோனா தொற்று என்பதை பூஜ்ஜியமாக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்படவில்லை. சென்னையில் 65 சதவீதம் பேர் முகக் கவசம் அணியவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ 101 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/65-percent-of-chennai-people-not-wearing-masks-441931.html