அதிவேகமாக பரவும் மெட்ராஸ் ஐ விடுமுறை அறிவித்த தனியார் பள்ளி – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

தட்சிண கன்னடா,-தட்சிண கன்னடா மாவட்டத்தில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுகிறது. மாணவர்களிடையே வேகமாக பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சில நாட்களாக ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் பரவுகிறது. மங்களூரின் பஜ்பே, எக்காரு, பண்டுவால், பெல்தங்கடி பகுதிகளில் பரவல் அதிகமாக உள்ளது.

தினமும் 100க்கும் மேற்பட்டோர் ‘மெட்ராஸ் ஐ’ பிரச்னையால் கண் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இந்த கண் நோய் பாதிக்கப்பட்டோர் கறுப்பு கண்ணாடியுடன் நடமாடி வருகின்றனர். மேலும் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கறுப்பு கண்ணாடியுடன் நடமாடி வருகின்றனர். பெல்தங்கடியில் மாணவர்களுக்கு அதிக அளவில் பரவுவதால், தனியார் பள்ளிகள் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐ பாதித்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அறிகுறிகள் என்ன?

‘விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே ‘மெட்ராஸ் ஐ’ எனப்படுகிறது. இந்த பாதிப்புள்ளவர்களுக்குக் கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். கண்ணின் வெண்படலத்தின் மேலே மற்றும் இமைகளின் உள்ளே எரிச்சலை ஏற்படுத்தி கண் சிவப்பு அல்லது ரோஸ் நிறுத்துக்கு மாறி விடும்.

இது, எளிதில் மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. இது, கருவிழியை தாக்கினால் பார்வை பறிபோக வாய்ப்புள்ளது.

எனவே, ‘இந்த கண் நோய் பாதித்த பகுதிகளில் இருப்பவர்கள் கண்ணை அடிக்கடி தொடாமல் இருப்பது, அவ்வப்போது கை கழுவுவது, வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்கும்’ என சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


முழுமையாக செயல்படாத மினி விதான் சவுதா

முந்தய


தி.மு.க.,விடம் அதிக ‘சீட்’ கேட்டுப் பெற ஆலோசனை!

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNzE5MznSAQA?oc=5