தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், கிழக்கு திசை காற்றின் காரணமாக 5 நட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 5 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiRWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9yYWluLWFsZXJ0LWZvci1jaGVubmFpLTg0ODYzMNIBSWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvcmFpbi1hbGVydC1mb3ItY2hlbm5haS04NDg2MzA?oc=5