இந்நிலையில், நேற்று காலை மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது இரண்டாவது மகனைக் கண்டித்துக் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டதற்கு, முதல் மகன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அடித்திருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் மீதும், உடற்கல்வி ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் கவினின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளனர். மாணவன் இறந்ததில் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பள்ளியில் எந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே சமயத்தில் அந்த பகுதியில் 50-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்துவரும் நீலாங்கரை பகுதி போலீஸார், முதற்கட்டமாக உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனைக் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஆசிரியர் அடித்ததில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvYXJ0aWNsZS1hYm91dC1jaGVubmFpLXByaXZhdGUtc2Nob29sLTItc3R1ZGVudC1zdWljaWRl0gFjaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUvYXJ0aWNsZS1hYm91dC1jaGVubmFpLXByaXZhdGUtc2Nob29sLTItc3R1ZGVudC1zdWljaWRl?oc=5