மூன்று பேரில் ஒருவன் ரெட் கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தான். லைட் புளுக்கலர் பேன்ட் போட்டவன், கோடரியால் மாமாவை வெட்டினான். என்னை நோக்கி வந்தபோது நான் தப்பி ஓடிவிட்டேன். ஆனால் அவர்களை பார்த்தால் அடையாளம் காட்டுவேன். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். எனவே என்னுடைய மாமாவைக் கொலைசெய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 341, 302 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடிவந்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்ட மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கின்றனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவல்படி மற்றவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய கொரட்டூர் போலீஸார், “கொலைசெய்யப்பட்ட ரௌடி கருக்கா சுரேஷின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை நெருங்கிய நிலையில்தான் மூன்று பேர் சரணடைந்திருக்கிறார்கள். மற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். கருக்கா சுரேஷை பின்தொடர்ந்து வந்து இந்தக் கும்பல் கொலைசெய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது” என்றனர்.
சென்னை, அம்பத்தூர் பாடி பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcG9saWNlLWFycmVzdGVkLXRocmVlLXlvdW5nc3RlcnMtaW4tYS1yb3dkeS1tdXJkZXItY2FzZS1pbi1jaGVubmFp0gFvaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUvcG9saWNlLWFycmVzdGVkLXRocmVlLXlvdW5nc3RlcnMtaW4tYS1yb3dkeS1tdXJkZXItY2FzZS1pbi1jaGVubmFp?oc=5