சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன.
விளம்பரப் பலகைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சாயக்கூடிய நிலையில் உள்ள விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில், 62 விளம்பரப் பலகைகள் மற்றும் 33 டிஜிட்டல் பேனர்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiggFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2xhdGVzdC1uZXdzL2VtYW5zLXdhaXRpbmctdG8ta2lsbC10aGUtcGVvcGxlLW9mLWNoZW5uYWktaW1tZWRpYXRlLWFjdGlvbi10YWtlbi1ieS10aGUtY29ycG9yYXRpb24tMTU1ODI50gGGAWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vYW1wL2xhdGVzdC1uZXdzL2VtYW5zLXdhaXRpbmctdG8ta2lsbC10aGUtcGVvcGxlLW9mLWNoZW5uYWktaW1tZWRpYXRlLWFjdGlvbi10YWtlbi1ieS10aGUtY29ycG9yYXRpb24tMTU1ODI5?oc=5