தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும் என்பதாலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijQFodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLWNoZW5uYWktbWV0ZW9yb2xvZ2ljYWwtY2VudHJlLXNheXMtY2hhbmNlLW9mLXJhaW4taW4tdGFtaWwtbmFkdS1mb3ItdGhlLW5leHQtMy1ob3Vycy01NTAwMjnSAZEBaHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtY2hlbm5haS1tZXRlb3JvbG9naWNhbC1jZW50cmUtc2F5cy1jaGFuY2Utb2YtcmFpbi1pbi10YW1pbC1uYWR1LWZvci10aGUtbmV4dC0zLWhvdXJzLTU1MDAyOQ?oc=5