துபாய் விமான நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த பயணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையிலிருந்து துபாய் சென்ற ஷினு தாமஸ், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பிற்பகலில் சென்னை திரும்புவதற்காக துபாய் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவசர மருத்துவ காரணங்களுக்காக சிலர் செல்ல வேண்டி உள்ளதால், அவரை இரவு விமானத்தில் செல்லும்படி எமிரேட்ஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென மதிய விமானத்திலேயே செல்லும்படி அவரை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை திரும்பிய ஷினு தாமஸ், இது குறித்து நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஷினு தாமசுக்கு, 50 ஆயிரம் ரூபாயை நான்கு வார காலத்திற்குள் வழங்க எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibmh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1wYXNzZW5nZXItZGlzdHJlc3NlZC1hdC1kdWJhaS1haXJwb3J0LWNvdXJ0LW9yZGVycy1hY3Rpb24tMTU2MjI40gFyaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1wYXNzZW5nZXItZGlzdHJlc3NlZC1hdC1kdWJhaS1haXJwb3J0LWNvdXJ0LW9yZGVycy1hY3Rpb24tMTU2MjI4?oc=5