சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் மாதம் ரூ.70,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!!
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
வேலைவாய்ப்பு
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வாகன ஓட்டுநர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 1.07.2017 அன்றைய நிலவரப்படி 18 வயது 32 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகனச் சட்டம் 1939-ன் படி அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று புதுப்பிக்கப்பட்டு வைத்திருத்தல் வேண்டும். மேலும் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கார் ஓட்டுனராக பணியாற்றிய முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஏப்.1 முதல் விநியோகம்.. முகவர்களுக்கு பயிற்சி – அமைச்சர் தகவல்!
Exams Daily Mobile App Download
இப்பணியில் நியமிக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19500 முதல் ரூ 71900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, கல்விச்சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக வருகிற ஜனவரி 2ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009
Follow our Twitter Page for More Latest News Updates
TNPSC Online Classes
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWWh0dHBzOi8vdGFtaWwuZXhhbXNkYWlseS5pbi9jaGVubmFpLXN0LWdlb3JnZS1jaGVubmFpLWludml0ZXMtYXBwbGljYXRpb24tZm9yLWplZXAtZHJpdmVy0gEA?oc=5