பொது நூலக இயக்கம் சென்னை இலக்கியத் திருவிழாவினை 2023 ஆம் ஆண்டும் ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை கல்வி மண்டலத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு இலக்கியப் போட்டிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படவுள்ளது.
மாணவர்களுக்கு ஒரு நிமிட பேச்சாற்றல், தமிழ்க் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, கதைகதையாம் காரணமாம், உடனடி ஹைக்கூ, கதையும் திறனாய்வும், இலக்கிய வினாடி வினா, தமிழர் பண்பாடு தலைப்பில் ஓவியப் போட்டி, புதுமைப்பித்தன் சிறுகதை நாடகமாக்கல், நாட்டுப்புறக் கலைகள் தலைப்பில் கருத்தரங்கம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் தொடர்பான போட்டிகள், விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய நாடகப் போட்டி, இலக்கிய மாந்தர், பேச்சுப் போட்டி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறவுள்ளது.
Also Read : ஜேஇஇ தேர்வு என்றால் என்ன? விண்ணப்பிக்கும் முறை விவரங்கள்!
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட கூகுல் படிவத்தில் பதிவு செய்யலாம்.
Google form URL – https://t.co/Uy8E6zlaKA#School #Students #Education #Teachers #GovtSchools #TNSED #TNGovtSchools #TNEducation #TNschools #பள்ளிக்கல்வித்துறை@Anbil_Mahesh pic.twitter.com/KdeRftH1sz— தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (@tnschoolsedu) December 26, 2022
ஆர்வமுள்ள சென்னை கல்லூரி மாணவர்கள் Google form URL – https://t.ly/8qC- என்ற லிங்கில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி குறித்த விவரங்கள் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்குப் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2VkdWNhdGlvbi9jaGVubmFpLWxpdGVyYXJ5LWZlc3RpdmFsLTIwMjMtY29tcGV0aXRpb24tYW5ub3VuY2VkLWZvci1jb2xsZWdlLXN0dWRlbnRzLTg2MjYwMy5odG1s0gGBAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9lZHVjYXRpb24vY2hlbm5haS1saXRlcmFyeS1mZXN0aXZhbC0yMDIzLWNvbXBldGl0aW9uLWFubm91bmNlZC1mb3ItY29sbGVnZS1zdHVkZW50cy04NjI2MDMuaHRtbA?oc=5