சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் உள்ள 350 தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிராத்தனை நடந்தது. இதனால் மாநகர காவல்துறை சார்பில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்பட்டது.
அதன்படி போலீசார் நடத்திய சிறப்பு வாகன சோதனையின் போது, போதையில் வாகனம் ஓட்டியதாக 140 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காமராஜர் சாலை மற்றும் பல்வேறு இடங்களில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கியதாக 4 வழக்குகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபட்டதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjUzODPSAQA?oc=5