இதையடுத்து திருவல்லிக்கேணி அண்ணாசாலை பகுதியில சுமார் 6 பைக்குகளில் ரேஸில் ஈடுபட்டவர்களை அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தேடிவந்தனர். அதில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரதீப் (21), ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது அராபத் (21), அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற அருள் வாசன் (20), ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்துவம் வகையில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்திருக்கிறார்கள்.
இது குறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “பண்டிகைத் தினத்தன்று இதைப் போல பைக் ரேஸில் சிலர் வாடிக்கையாக ஈடுபட்டு வருகிறார்கள். அதைத் தடுக்க பல நடவடிக்கை எடுத்துள்ளோம். பைக் ரேஸில் ஈடுபடுவோர்கள் தங்களுக்குள் ஒரு வாட்ஸ்அப் குரூப்பை வைத்துக் கொண்டு அதன்மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். திடீரென பைக் ரேஸில் அவர்கள் ஈடுபடுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால்தான் இந்தத் தடவை சிசிடிவி மூலம் பைக் ரேஸ்களைப் பிடித்திருக்கிறோம். புத்தாண்டு தினத்தன்றும் சென்னையில் பைக் ரேஸ் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcG9saWNlLWFycmVzdGVkLXlvdW5nc3RlcnMtd2hvLWRpZC1hLWJpa2UtcmFjZS1pbi1jaGVubmFpLWF0LWNocmlzdG1hcy1kYXnSAXdodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9wb2xpY2UtYXJyZXN0ZWQteW91bmdzdGVycy13aG8tZGlkLWEtYmlrZS1yYWNlLWluLWNoZW5uYWktYXQtY2hyaXN0bWFzLWRheQ?oc=5