திருப்பூர் : தமிழக அளவிலான ஏற்றுமதி வர்த்தகத்தில், காஞ்சிபுரம் முன்னிலை வகிக்கும் நிலையில், திருப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு வகையான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. கடந்த, 2021 – 22ல், இங்கிருந்து, 2 லட்சத்து, 62 ஆயிரத்து, 323 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், 1 லட்சத்து, 82 ஆயிரத்து, 568 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளதாக, மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்தாண்டு, 73 ஆயிரத்து, 340 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது; இந்தாண்டின் ஏழு மாதங்களில், 56 ஆயிரத்து, 74 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.
சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது; கடந்த ஆண்டில், 41 ஆயிரத்து, 714 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இந்தாண்டில், ஏழு மாதங்களில், 31 ஆயிரத்து, 11 கோடிக்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
திருப்பூர் 3ம் இடம்
திருப்பூர் மாவட்டம், மூன்றாவது இடத்தில் இருக்கிறது; கடந்த ஆண்டு, 35 ஆயிரத்து, 834 கோடி ரூபாய்க்கு பனியன் உள்ளிட்டவை ஏற்றுமதியாகின. இந்தாண்டின் ஏழு மாதங்களில், 22 ஆயிரத்து, 291 கோடி ரூபாய்க்கு பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளன. கோவை மாவட்டம், நான்காவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், ‘சர்வதேச பொருளாதாரத்தில் மந்தநிலை சீராகி, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மேம்பட்டு வருகிறது. ‘தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம் சகஜ நிலைக்கு வந்துவிட்டது. அதிக வளர்ச்சி இல்லாவிட்டாலும், கடந்தாண்டைக் காட்டிலும் அதிகம் வர்த்தகம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றனர்.
வளிமண்டல சுழற்சியால் மிதமான மழைக்கு வாய்ப்பு
வெளிநாட்டவர் தனிமைப்படுத்துதல் ரத்து செய்தது சீன அரசு
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMDQ3NjfSAQA?oc=5