சர்வதேச பள்ளி டேபிள் டென்னிஸ்: தங்கம் வென்ற சென்னை வீராங்கனைகள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

3-வது சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடந்து வருகிறது. டேபிள் டென்னிஸ், சிலம்பம், கைப்பந்து, யோகா, கூடைப்பந்து, தடகளம், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.

இதில் டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லத்திகா 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை வீராங்கனையையும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உத்பிரக்ஷா 3-1 என்ற செட் கணக்கில் நேபாளம் வீராங்கனையையும் தோற்கடித்தனர். சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vU3BvcnRzL090aGVyU3BvcnRzL2ludGVybmF0aW9uYWwtc2Nob29sLXRhYmxlLXRlbm5pcy1jaGVubmFpLXBsYXllcnMtd2luLWdvbGQtODY4Mjc30gF1aHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvU3BvcnRzL090aGVyU3BvcnRzL2ludGVybmF0aW9uYWwtc2Nob29sLXRhYmxlLXRlbm5pcy1jaGVubmFpLXBsYXllcnMtd2luLWdvbGQtODY4Mjc3?oc=5