சென்னை: ஜன.1 வரை 7 முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜன.1 வரை நெல்லை, நாகர்கோவில், மதுரை, கோவை, ஈரோடு, சேலம், திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னைக்கு தினசரி இயக்கக்கப்படும் பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjY2NTLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjY1Mi9hbXA?oc=5