சென்னை மாநகர பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்களை பொது மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை தரமணியை சேர்ந்த மீனாட்சி என்பவர் பாரிமுனை நோக்கி அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். பேருந்து அடையார் துணை ஆணையர் அலுவலகம் அருகே சென்ற போது, 4 பெண்கள் மீனாட்சியின் 2 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, அக்கம்பக்கத்தினர் 4 பெண்களை துரத்திய நிலையில், 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில், தப்பி சென்ற ஒரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hhaW4tc25hdGNoZWQtbmVhci1kZXB1dHktY29tbWlzc2lvbmVycy1vZmZpY2UtY2hlbm5haS0xNTg4ODDSAWhodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy9jaGFpbi1zbmF0Y2hlZC1uZWFyLWRlcHV0eS1jb21taXNzaW9uZXJzLW9mZmljZS1jaGVubmFpLTE1ODg4MA?oc=5