பாலியல் வன்கொடுமை வழக்கில் ராஜீவகாந்தி அரசு மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை: சென்னை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாருக் தீர்ப்பு வழங்கினார். கொரோனா காலத்தில் 2021-ல் டதேனாம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த சக பெண்மருத்துவரை வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjcxMjTSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzEyNC9hbXA?oc=5