சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்சி ரோட்டில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மோகனா என்பவர் சாலையோரம் துணிக்கடை நடத்திவருகிறார். இந்த பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மாமூல் கேட்டதாக சொல்லப்படுகிறது.
`கடை நடத்தவேண்டும் என்றால் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி கடையை காலிசெய்துவிடுவேன்’ என்று மிரட்டி மாமூல் வசூல் செய்திருக்கிறார். இதேபோல, அந்த பகுதியில் கடை வைத்துள்ள மோகனாவிடம் ஜெகதீசன் மாமூல் கேட்டிருக்கிறார். அதற்கு மோகனா பணம் கொடுக்க மறுக்கவே, ஜெகதீசன் தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMic2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvY2hlbm5haS1jb3VuY2lsb3JzLWh1c2JhbmQtYXJyZXN0ZWQtZm9yLWFza2luZy1icmliZXJ5LWZyb20tcm9hZHNpZGUtc2hvcGtlZXBlcnPSAX1odHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9jaGVubmFpLWNvdW5jaWxvcnMtaHVzYmFuZC1hcnJlc3RlZC1mb3ItYXNraW5nLWJyaWJlcnktZnJvbS1yb2Fkc2lkZS1zaG9wa2VlcGVycw?oc=5