சென்னையில் மாநகராட்சி ஊழியரை நிர்ப்பந்தித்து வெறும் கையால் கழிவு நீரை அகற்ற வைத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை முன்னிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் அந்த ஊருக்கு மூத்த அமைச்சர்களை அனுப்பி வைக்காதது ஏன் என்று கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே நகரில் மாநகராட்சி பணியாளரை வெறும் கையால் கழிவு நீரை அகற்ற வைத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiqQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy90YW1pbC1uYWR1L2FubmFtYWxhaS1jb21wbGFpbnMtdGhhdC1yay1uYWdhci1kbWstbWxhLW1hZGUtdGhlLWNoZW5uYWktY29ycG9yYXRpb24tZW1wbG95ZWUtY2xlYXItdGhlLXNld2FnZS13aXRoLWhpcy1iYXJlLWhhbmRzLTg2NzM5Ny5odG1s0gGtAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy90YW1pbC1uYWR1L2FubmFtYWxhaS1jb21wbGFpbnMtdGhhdC1yay1uYWdhci1kbWstbWxhLW1hZGUtdGhlLWNoZW5uYWktY29ycG9yYXRpb24tZW1wbG95ZWUtY2xlYXItdGhlLXNld2FnZS13aXRoLWhpcy1iYXJlLWhhbmRzLTg2NzM5Ny5odG1s?oc=5