சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டினர் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழகத்தின் பண்பாடு பற்றி அறிய சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஆட்ேடாவில் வெளிநாட்டினர் வந்தனர்.

ஆண்டாள் கோவில்

ஜெர்மனி, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 40 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர்.

பின்னர் பல்வேறு ஆட்டோக்களில் பல அணிகளாக பிரிந்து சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல முடிவு செய்தனர். இந்த குழுக்களை சேர்ந்த மேட், ஜான், அமான்யா, ஜோஸ்டின், பென், ஐலீன் உள்பட 10 பேர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 3 ஆட்டோக்களில் வந்தனர். பின்னர் அவர்கள் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அந்தந்த நாடுகளின் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை தெரிந்து கொள்கிறோம்.

வரவேற்பு மகிழ்ச்சி

கடந்த ஆண்டு இலங்கை சென்றோம். தற்போது சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆட்டோ மூலம் பயணம் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள இடங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்டோவில் சென்று வருகிறோம். எல்லா இடங்களிலும் தமிழக மக்கள் அன்புடன் வரவேற்கின்றனர்.

இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதையடுத்து அவர்கள் ஆட்டோ மூலம் ராஜபாளையம் புறப்பட்டு சென்றனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9mb3JlaWduZXJzLXdoby1jYW1lLWZyb20tY2hlbm5haS10by1zcml2aWxsaXB1dGh1ci1ieS1hdXRvLTg3MTcwNNIBbWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvZm9yZWlnbmVycy13aG8tY2FtZS1mcm9tLWNoZW5uYWktdG8tc3JpdmlsbGlwdXRodXItYnktYXV0by04NzE3MDQ?oc=5