மெட்ரோ விரிவாக்கம்
இந்த சேவை 2026ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் உடன் போதிய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள 7 சாலைகளை விரிவாக்கம் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) முடிவு செய்துள்ளது. அதன்படி,
சாலை | நீளம் (கிலோமீட்டர்) | விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு (மீட்டர்) | தற்போதைய அளவு (மீட்டர்) |
சர்தார் படேல் சாலை (அண்ணா சாலை டூ மத்திய கைலாஷ்) | 3 | 30.5 | 20 |
எத்திராஜ் சாலை (பேந்தியான் சாலை டூ கூவம்) | 0.72 | 18 | 10.2 |
கீழ்ப்பாக்கம் கார்டர் சாலை (டெய்லர் சாலை டூ அண்ணா நகர் முதல் மெயின் ரோடு) | 1.4 | 18 | 9-15 |
டேங்க் புந்த் சாலை (நெல்சன் மாணிக்கம் சாலை டூ வள்ளுவர் கோட்டம் சாலை) | 1.1 | 18 | 14-20 |
கிரீம்ஸ் சாலை (அண்ணா சாலை டூ பேந்தியான் சாலை) | 1.3 | 18 | 12-22 |
நியூ ஆவடி சாலை | 1.3 | 18 | 10-18 |
பெரம்பூர் பர்ராக்ஸ் சாலை | 1.5 | 24 | — |
இந்தப் பணிகளுக்காக குறைந்தது 18 மீட்டர் வரை நிலப்பகுதியை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு முதல்கட்ட சர்வே மற்றும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி தற்போதுள்ள அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள், இடமாற்றம் செய்ய வேண்டிய விஷயங்கள், அகற்ற வேண்டிய மரங்கள், இடிக்க வேண்டிய கட்டிடங்கள்,
எடுக்கப்படும் நடவடிக்கைகள்
வழங்க வேண்டிய இழப்பீடு ஆகியவை தொடர்பாக உரிய விவரங்கள் சேகரிக்கப்படும். சரியான திட்டமிடல் உருவாக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரை சந்தித்து எப்போது அகற்றப்படும், எவ்வளவு நிலம் தேவைப்படுகிறது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆகிய விஷயங்கள் விளக்கப்படும்.
விரைவில் இறுதி அறிக்கை
இதுதொடர்பான இறுதி அறிக்கை நடப்பு மாதத்தின் இறுதியில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக கையகப்படுத்தும் நிலங்களில் வாகன பயன்பாடு மட்டுமின்றி நடைபாதை, சைக்கிளிங் செய்ய தனித்தனியே சிறப்பு பாதைகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் நகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கலாம்.
புதிய வசதிகள்
நிலம் கையகப்படுத்துவது என்பது தற்காலிக தீர்வு மட்டுமே. இந்த விஷயத்தை அதன் ஆணிவேரில் இருந்து தீர்வு காண முயற்சித்தால் தான் முழுமையான பலன் தரும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். அடுத்தகட்டமாக எல்.பி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, ஹண்டர்ஸ் சாலை ஆகியவற்றில் படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMipwFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL2NoZW5uYWktbmV3cy9jbWRhLXBsYW5zLXRvLXdpZGVuLXNldmVuLWNoZW5uYWktY2l0eS1yb2Fkcy10by1pbXByb3ZlLWNvbm5lY3Rpdml0eS10by1tZXRyby1yYWlsLXN0YXRpb25zL2FydGljbGVzaG93Lzk2NzkwNDE0LmNtc9IBqwFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL2NoZW5uYWktbmV3cy9jbWRhLXBsYW5zLXRvLXdpZGVuLXNldmVuLWNoZW5uYWktY2l0eS1yb2Fkcy10by1pbXByb3ZlLWNvbm5lY3Rpdml0eS10by1tZXRyby1yYWlsLXN0YXRpb25zL2FtcF9hcnRpY2xlc2hvdy85Njc5MDQxNC5jbXM?oc=5