சென்னை டூ குமரி.. ஸ்டைலா, கெத்தா பாட்ஷா போல் ஆட்டோவில் வந்த வெளிநாட்டு பயணிகள்! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து 17 ஆட்டோக்களில் சுற்றுலா புறப்பட்ட வெளிநாட்டினா் கன்னியாகுமரி வந்தனா்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக வெளிநாட்டினா் பங்கு பெறும் ‘ஆட்டோ சேலஞ்ச்‘ என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
நிகழாண்டு ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டினா் பங்கு பெற்ற ஆட்டோ சுற்றுலாப் பயணம் கடந்த டிசம்பா் 28ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜொ்மனி, நியூசிலாந்து, நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, எஸ்தோனியா, போலந்து ஆகிய 8 நாடுகளைச் சோ்ந்த 37 பயணிகள் கலந்து கொண்டு 17 ஆட்டோக்களில் புறப்பட்டனா்.

ஆட்டோக்களை வெளிநாட்டினரே ஓட்டி சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டனர். சென்னையில் இருந்து புறப்பட்ட இவா்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜபாளையம், தூத்துக்குடி, வழியாக வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரிக்கு வந்தனா். அவா்களுக்கு தமிழக பாரம்பரிய கலாசார முறைப்படி சங்கு மாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டனர். பின்னர், கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஆட்டோக்களில் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கிருந்து விமானம் மூலம் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனா். கொரோனா காலமான இரண்டு ஆண்டுகள் இந்த ‘ஆட்டோ சேலஞ்ச்’ சுற்றுலாவை நடத்த முடியாது தடைப்பட்டுள்ளது. இதனை நிர்வாகி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறினார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vbGlmZXN0eWxlL2ZvcmVpZ24tdHJhdmVsZXJzLXdoby1kcm92ZS1hbi1hdXRvLWZyb20tY2hlbm5haS10by1rYW55YWt1bWFyaS01NzIxNDQv0gEA?oc=5