சென்னையில் நாளை தொழில் நிறுவன முதலீட்டாளா்கள் மாநாடு – தினமணி

சென்னைச் செய்திகள்

தமிழ்நாடு ஸ்டாா்ட்அப் மற்றும் புதுமைப் படைப்பு முதலீட்டாளா்கள் மாநாடு திங்கள்கிழமை ( ஜன.9) நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு ஸ்டாா்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக தொழில்முனைவோா் சாா்பில் தமிழ்நாடு ஸ்டாா்ட்அப் மற்றும் இன்னோவேஷன் முதலீட்டாளா்களின் ஒரு நாள் மாநாடு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள் கிழமை (ஜன.9) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாநாட்டை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைக்கிறாா். சிறப்பு விருந்தினா்களாக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

நிறைவாக, அமெரிக்கன் தமிழ் நிதி மூலம் ரூ.10 கோடி ஸ்டாா்ட்அப் முதலீடு மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigwRodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzA4LyVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OCVFMCVBRSVBRiVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQTglRTAlQUUlQkUlRTAlQUUlQjMlRTAlQUYlODgtJUUwJUFFJUE0JUUwJUFGJThBJUUwJUFFJUI0JUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVBOCVFMCVBRSVCRiVFMCVBRSVCMSVFMCVBRiU4MSVFMCVBRSVCNSVFMCVBRSVBOS0lRTAlQUUlQUUlRTAlQUYlODElRTAlQUUlQTQlRTAlQUUlQjIlRTAlQUYlODAlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUYlRTAlQUUlQkUlRTAlQUUlQjMlRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQtJUUwJUFFJUFFJUUwJUFFJUJFJUUwJUFFJUE4JUUwJUFFJUJFJUUwJUFFJTlGJUUwJUFGJTgxLTM5ODA1NjEuaHRtbNIBgARodHRwczovL20uZGluYW1hbmkuY29tL2FsbC1lZGl0aW9ucy9lZGl0aW9uLWNoZW5uYWkvY2hlbm5haS8yMDIzL2phbi8wOC8lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODglRTAlQUUlQUYlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJUE4JUUwJUFFJUJFJUUwJUFFJUIzJUUwJUFGJTg4LSVFMCVBRSVBNCVFMCVBRiU4QSVFMCVBRSVCNCVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQTglRTAlQUUlQkYlRTAlQUUlQjElRTAlQUYlODElRTAlQUUlQjUlRTAlQUUlQTktJUUwJUFFJUFFJUUwJUFGJTgxJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJTgwJUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlGJUUwJUFFJUJFJUUwJUFFJUIzJUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThELSVFMCVBRSVBRSVFMCVBRSVCRSVFMCVBRSVBOCVFMCVBRSVCRSVFMCVBRSU5RiVFMCVBRiU4MS0zOTgwNTYxLmFtcA?oc=5