சென்னை மாரத்தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று காலை தொடங்கி  நடைபெற்று வரும் மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்

சென்னை ரன்னா்ஸ் மாரத்தான் நெடுந்தூர ஓட்டக்குழுவினா் சாா்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது

மாரத்தானை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன.8) தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கும் இந்த மாரத்தான், நேப்பியா் பாலத்தில் இருந்து திரு.வி.க.பாலம், சிபிடி சந்திப்பு, டைடல் பாா்க், துரைப்பாக்கம் வழியாக தாம்பரம் மாநகர காவல் எல்லையான ராஜீவ் நகா் சந்திப்பு வந்தடைந்து, அங்கிருந்து சோழிங்கநல்லூா், கே.கே.சாலை, அக்கரை, பனையூா், எம்ஜிஎம் வழியாக இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் அருகில் மாரத்தான் முடிவடைகிறது.

எனவே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 முதல் 9 மணி வரை, சோழிங்கநல்லூா் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் திரும்பி செம்மொழிச்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

ராஜீவ் நகா் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூா் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வலதுபுற சாலையில் செல்ல வேண்டும்.

இதையும் படிக்க: வெளியானது கவினின் ‘டாடா’ பட டீசர்

மேடவாக்கம் வழியாக சோழிங்கநல்லூா் செல்லும் வாகனங்கள் வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை வழியாகச் செல்ல வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMib2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDgvY2hlbm5haS1tYXJhdGhvbi1taW5pc3Rlci1tLXN1YnJhbWFuaWFuLWluYXVndXJhdGVkLTM5ODA2ODcuaHRtbNIBbGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzA4L2NoZW5uYWktbWFyYXRob24tbWluaXN0ZXItbS1zdWJyYW1hbmlhbi1pbmF1Z3VyYXRlZC0zOTgwNjg3LmFtcA?oc=5