சென்னை,
குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கக்கோரி அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை சென்னை ஐகோர்ட்டில் வெங்கடேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ”மனநலம் பாதித்து சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் குறித்து அரசு மறுவாழ்வு மையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க ஏதுவாக கட்டணமி்ல்லா தொலை பேசி எண்ணை அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், ”மாநிலம் முழுவதும் ஏற்கெனவே அரசு நிதியுதவியுடன் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 தொண்டு நிறுவனங்கள் மூலம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மனநல பாதிப்புக்குப்பிறகு குணமடைந்தவர்களுக்காக கன்னியாகுமரி, வேலூர், ராமநாதபுரம், திருச்சி, மதுரையில் ஆகிய இடங்களில் உள்ள இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ”மனநல பாதிப்புடன் சுற்றித் திரிபவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட மையங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் கட்டணமி்ல்லா தொலைபேசி எண்ணை அறிவி்ப்பது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihQFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvYS10b2xsLWZyZWUtbnVtYmVyLXNob3VsZC1iZS1hbm5vdW5jZWQtZm9yLXJlcG9ydGluZy1tZW50YWwtaWxsbmVzcy1jaGVubmFpLWhpZ2gtY291cnQtODc1NDg50gGJAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvYS10b2xsLWZyZWUtbnVtYmVyLXNob3VsZC1iZS1hbm5vdW5jZWQtZm9yLXJlcG9ydGluZy1tZW50YWwtaWxsbmVzcy1jaGVubmFpLWhpZ2gtY291cnQtODc1NDg5?oc=5