சென்னை தீவுத்திடலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சங்கமம் விழாவை, இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். சென்னை தீவுத்திடலில், சென்னை சங்கமம் விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி (நாளை) முதல் வரும் 17-ஆம் தேதி வரை, செம்மொழிப்பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை சென்னை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின் படி, சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 இடங்கள் என்னவென்றால்:
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை சாலை, தி.நகர் நடேசன் பூங்கா, வளசரவாக்கம் ராம கிருஷ்ணன் நகர் மைதானம், கொளத்தூரில் உள்ள மாநகராட்சி மைதானம், ராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானம், மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், அண்ணாநகர் டவர் பூங்கா உள்ளிட்ட 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து என பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.
4 நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை 30 நிமிட இடைவெளியில் நடனம், இசை நிகழ்ச்சிகள் என்று பலவகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகள், பிற மாநில நடனங்கள் ஆகியவற்றின் கலவையாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக மேடைகள், தரமான குடிநீர் வசதி, கழிப்பறைகளை ஆகியவை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMib2h0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vZW50ZXJ0YWlubWVudC90YW1pbC1uYWR1LWNtLW1rLXN0YWxpbi1pbmF1Z3VyYXRlZC1jaGVubmFpLXNhbmdhbWFtLTIwMjMtNTc2MTQ3L9IBdGh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vZW50ZXJ0YWlubWVudC90YW1pbC1uYWR1LWNtLW1rLXN0YWxpbi1pbmF1Z3VyYXRlZC1jaGVubmFpLXNhbmdhbWFtLTIwMjMtNTc2MTQ3L2xpdGUv?oc=5