சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இன்று போகிப் பண்டிகை, நாளை தமிழர் திருநாள் , 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல். இதையடுத்து, பள்ளி கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சில தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கடந்த இரண்டு நாட்களாவே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 18ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும். தனியார் பள்ளிகளை பொருத்தவரையில் சில பள்ளிகள் முன்கூட்டியே திறக்கவும் முடிவு செய்துள்ளன.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzA3NjDSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMDc2MC9hbXA?oc=5