சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
16-01-2023 முதல் 17-01-2023 வரை :- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
18-01-2023 முதல் 20-01-2023 வரை:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனி மூட்டம் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihQFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvZHJ5LXdlYXRoZXItdG8tcHJldmFpbC1pbi10YW1pbC1uYWR1LWZvci10aGUtbmV4dC01LWRheXMtY2hlbm5haS1tZXRlb3JvbG9naWNhbC1jZW50cmUtODc5NDYz0gGJAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvZHJ5LXdlYXRoZXItdG8tcHJldmFpbC1pbi10YW1pbC1uYWR1LWZvci10aGUtbmV4dC01LWRheXMtY2hlbm5haS1tZXRlb3JvbG9naWNhbC1jZW50cmUtODc5NDYz?oc=5